
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில் புலி இருப்பதை அறியாமல் ஒரு மான் குட்டி வந்து விடுகிறது. பின் புலியும் அதை பார்க்க, மான் குட்டி செய்வதறியாது அஞ்சி நிற்கிறது. இன்றுடன் நம் வாழ்க்கை அவ்வளவுதான் என மான் குட்டி நினைத்துக்கொண்டிருக்கிறது. எனினும் அதை ஏதும் செய்யாமல் கடந்து செல்கிறது புலி. அதற்கு அப்போது இரை தேவைப்படவில்லை என தெரிகிறது. இதனால் அந்த மான் உயிர் பிழைத்தது. இதுகுறித்த வீடியோ தற்போது யூடியூப் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
#Tiger approaches #deer and then…. pic.twitter.com/nNDdqxEIlD
— Uttarakhand Forest Research Institute (@ukfrihaldwani) February 28, 2023