புனே விமான நிலையத்தின் பெயர் மாற்றம் குறித்த முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு, புனே விமான நிலையத்திற்கு ‘ஜகத்குரு சாந்த் துக்காராம் மகராஜ் சர்வதேச விமான நிலையம்’ என பெயர் மாற்றும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு இறுதியாகும் வகையில், மத்திய அரசின் ஒப்புதலை பெறும் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேயர் விமான நிலையம் ‘ஸ்ரீ விஜயபுரம்’ என பெயர் மாற்றப்பட்டதை தொடர்ந்து, தற்போது புனே விமான நிலையத்தின் பெயர் மாற்றம் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பெயர் மாற்றம் குறித்து பல்வேறு தரப்பினரிடையே கருத்து வேறுபாடுகள் எழும்பியுள்ளன. ஒருபுறம், இந்த முடிவு மாநிலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், மறுபுறம், விமான நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்வது அவசியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.