மத்திய பிரதேஷ், அஜ்மீர்-ஜாபல்பூர் தேயோடயா விரைவு ரயிலில் கடந்த புதன்கிழமை அன்று பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும் போது சீட்டின் அடிப்பகுதியில் பச்சை நிறத்தில் பாம்பு ஒன்று பதுங்கியிருந்து உள்ளது. இதனை பார்த்த ரயில் பயணிகள் பயந்து அலறினர். அதில் சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.

இந்தப் பாம்பு அந்த ரயிலின் ஏசி ஏ1 கோச்சில் இருந்துள்ளது. அதன் பிறகு கோட்டா ஸ்டேஷனில் ரயில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அங்கு வந்த மீட்பு குழுவினர் ரயிலில் ஏறி சுமார் ஒன்றரை மணி நேரம் பாம்பை தேடினர். அதன் பிறகு பாம்பை மீட்டு சென்றனர். இதையடுத்து ரயில் வழக்கம் போல் இயங்கியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.