
சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கடந்த கால அண்ணா திமுக ஆட்சியில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே…. ஒரு மாதத்திற்கு முன்பாகவே….. ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு….
அங்கு இருக்கின்ற பகுதிகளில் தண்ணீர் தேங்காமல், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இன்றைய திறமை இல்லாத, பொம்மை முதலமைச்சர்… இந்த பணியை மேற்கொள்ளாத காரணத்தினால், இன்றைக்கு மக்கள் இரண்டு நாள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதோடு ஒரு வாரமாக இந்திய வானிலை ஆய்வு மையம் காற்றுடன் புயல் வரும்…
அப்பொழுது மழையும் பெய்யும் என்று தொடர்ந்து அறிவித்து வந்தன… அதையாவது இந்த அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு, முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள்…..ஒரு வார காலமாக இந்த விடியா திமுக அரசு…..
நிர்வாக திறமையற்ற இந்த அரசு, சரியான முறையில் திட்டமிட்டு பணியை மேற்கொள்ளாத காரணத்தினால்…. இன்றைக்கு ஆங்காங்கே சென்னை மாநகரம், சென்னை ஒட்டிய புறநகர் பகுதிகளும் தண்ணீர் தேங்கி…… வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னை மாநகரம் தண்ணீரிலே தத்தளித்து கொண்டிருக்கின்றன.
அண்ணா திமுக ஆட்சியில் முன்னெச்சரிக்கையாக….. எங்கெங்கெல்லாம் தண்ணீர் தேங்கி இருக்கின்றது என்று கண்டறியப்பட்டு, அந்த தண்ணீரை அகற்றுவதற்கு ராட்சச மோட்டாரை பொருத்தி தண்ணீரை நாங்கள் வெளியேற்றினோம்….
ஆனால் நேற்றைக்கு இரவில் தலைமைச் செயலாளர் பேட்டி கொடுக்கின்றார்….. ஊடகத்தில் பார்த்தேன்…… பத்திரிகையில் பார்த்தேன்…. இன்னைக்கு மழை விட்ட பிறகு, எங்கெங்கெல்லாம் தண்ணீர் தேங்கி இருக்கிறதோ… அந்த பகுதியில் தண்ணீர் அப்புறபடுத்துவதற்கு நாங்க NLC நிறுவனத்தில் இருந்து
ராட்சச மோட்டாரை வாங்குகிறோம் என்று சொல்கிறார்கள். இவர்கள் என்னைக்கு மோட்டாரை வாங்கி, என்னைக்கு பொருத்தி….. என்னைக்கு தண்ணீர் வெளியேற்ற போறாங்க ? அதுவரைக்கும் மக்கள் தண்ணீரில் அவதிப்பட வேண்டுமா ? ஆக திட்டமிட்டு செயல்படாத அரசாங்கம் என்பது நிரூபணம் ஆகிறது என தெரிவித்தார்.