இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட தொடர் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அதன் முதல் 2 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு போட்டியை வென்றுள்ளது. இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மழை பெய்ததால் போட்டி டிராவில் முடிந்தது. இந்த 3வது போட்டியின் டாஸ்ஸை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்தது, இந்தியா தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் இந்தியா முதல் இன்னிங்ஸ் விளையாடிய போது 260 நாட்களுக்கு ஆல்அவுட் ஆனது, ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெடுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 185 தங்கள் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலியா 2ம் இன்னிங்ஸில் 89 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது, அப்போது இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெடுகள் எடுத்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா விளையாடிக் கொண்டிருந்தபோது கனமழை பெய்தது. மேற்கொண்டு ஆட்டத்தை தொடர முடியாமல் மேட்ச் டிராவில் முடிந்தது. இதுவரை பும்ரா ஆஸ்திரேலியா மண்ணில் 53 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வெளிநாட்டில் அதிக விக்கட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கபில் தேவ் மற்றும் இஷாந்த் சர்மா தலா 51 விக்கெட்டுகள் எடுத்தது சாதனையாக இருந்தது, தற்போது அதனை தகர்த்த பும்ரா 53 விக்கெட்களுடன் புதிய உலக சாதனையை படித்துள்ளார்.