
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன்பிறகு இந்த படத்தில் சரிதா, யோகி பாபு, மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
மாவீரன் படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு மாவீரன் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#Maaveeran / #Mahaveerudu releasing on August 11th 😇@Siva_Kartikeyan 🔥
📌ICYMI – https://t.co/vSJ0OJeFOx #MaaveeranFromAugust11th @madonneashwin @AditiShankarofl @DirectorMysskin #Saritha @suneeltollywood @iYogiBabu @iamarunviswa @vidhu_ayyanna @philoedit… pic.twitter.com/KAU5jrVSqR
— Shanthi Talkies (@ShanthiTalkies) April 22, 2023