
தமிழ்நாடு மாநிலத்தில் நடிகர் விஜயால் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கினார். கட்சியின் தலைவர், நிறுவனர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த். இந்த நிலையில் கட்சியின் முதல் மாநாட்டை தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரபாண்டிய சாலையில் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டின் பாதுகாப்பு குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பாதுகாப்பு மேலாண்மை குழு கூறியதாவது, பெண்களுக்கென்று தனித்தனியாக இருக்கைகள், தனியாக ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேகமாக பகுதி ஒதுக்கப்பட்டு அவர்களை அழைத்து வர ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு வாகனங்கள் வந்தாலும் நெரிசல் ஏற்படாத வகையில் அனைத்து வாகனங்களையும் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்துள்ளோம். பெண்களுக்கான பாதுகாப்பு முழுவதையும் தங்கள் கட்சியின் மகளிர் அணியினரே ஏற்பாடு செய்துள்ளனர்.
பெண்கள் தங்களது வீட்டில் இருப்பதைப் போன்று பாதுகாப்பாக இந்த மாநாட்டில் இருப்பார்கள். ஒரு லட்சம் பேருக்கு மேல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கென உணவுகளும் தனித்தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. கழிவறை வசதிகளும் தனித்தனியாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக வெற்றி கழகத்தின் பாதுகாப்பு மேலாண்மை குழு தெரிவித்தது. த.வெ.க வின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு நல்ல முறையில் நடைபெற விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அச்சுத ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.