
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அடுத்த மாதம் 9-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை சங்கமம் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் புத்தக திருவிழாவின் முன்னோட்டமாக தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தை நினைவுபடுத்தும் வகையில் புத்தகங்களால் வடிவமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் வடிவில் லோகோவும் கடற்பசு வடிவில்
சின்னமும் வெளியிடப்பட்டது. மேலும் இந்த திருவிழாவை முன்னிட்டு மனதில் நிற்கும் வாசகம் போட்டியானது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற உள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எழுதிய இந்த வாசகங்கள் புத்தக திருவிழா முடியும் வரை அதில் இடம் பெறும்.
இதனையடுத்து வாசகங்களை அனுப்புவதற்கு 04573-231610 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம். அதுவும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது 70944 39999 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் வாசகங்களை அனுப்பலாம். இந்த மாதம் 30-ஆம் தேதிக்குள் வாசகங்களை அனுப்ப வேண்டும். இதில் சிறப்பான வாசகங்களை பதிவு செய்தவர்களுக்கு புத்தக கூப்பன், சான்றிதழ் மற்றும் அனைத்து நிகழ்வுகளுக்கான நுழைவுச்சீட்டு கொடுக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.