இந்தியர்கள் அனைவருக்குமே ஆதாரங்கள் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.  பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது.  ஆதார் கார்டு இல்லாவிட்டால் அரசு மற்றும் நிதி சார்ந்த பல வேலைகளை முடிக்க முடியாது. நலத்திட்ட உதவிகளும் கிடைக்காமல் போகும் . ஆதார் கார்டில் ஏதேனும் தவறு இருந்தால் செல்போன் எண்ணை புதுப்பிக்க விரும்பினால் அதை உடனடியாக செய்யலாம்.

ஆதார் PVC அட்டை வேண்டுமென்றால், https://uidai.gov.in/en/ MY Aadhaar என்ற இணையதள முகவரியில் நுழைய வேண்டும். அதன் பிறகு, ஆதார் எண், கேப்சாவை உள்ளிட்டால், மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை உள்ளிட்டு நுழைந்தால், PVC அட்டைக்கு விண்ணப்பிக்கும் வசதி இருக்கும். அதில் 50 ரூபாய் கட்டணம் செலுத்தியதும், சேவை கோரிக்கை எண் மொபைல் எண்ணுக்கு வரும். அதன்பிறகு PVC அட்டை தபாலில் அனுப்பி வைக்கப்படும்.