தமிழ்நாட்டில் பொது வழங்கல் துறையின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரேஷன் கடைகளில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ரேஷன் கடைகளில் விரைவில் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த தகவலை உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.