
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் லேசான மழை பெய்தது இதனை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களுக்கு லேசான மழையை தொடர்ந்து கனமழை வர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கே நோக்கி நகர்ந்துள்ளது. UTC நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவடைகிறது.
இதனால் திருகோணமலைக்கு தென்கிழக்கு சுமார் 310 கிலோமீட்டர் நாகப்பட்டினத்திலிருந்து 590 கிமீ தென்-தென்கிழக்கே, புதுச்சேரியில் இருந்து 710 கிமீ தென்-தென்கிழக்கே, தெற்கு- 800 கி.மீ வந்து சென்னைக்கு தென் கிழக்கு பகுதிகளில் சூறாவளி வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நவம்பர் 27ஆம் தேதிக்குள் சூறாவளி தமிழக கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விழுப்புரம், கடலூர் திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அதிகாரிகள் விடுமுறையை அறிவித்துள்ளனர். தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.