மதுரை ரயில்வே நிலையத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக வயலில் பயணிக்க மூதாட்டி ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு உதவி செய்வது போன்று நடித்து மூதாட்டியின் பையை ஒருவர் திருடி தப்பி சென்றுள்ளார். அந்த பையில் 15 பவுண் தங்க நகைகள் இருந்ததாக கூறி மூதாட்டி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது மூதாட்டிக்கு உதவுவது போன்று வந்த நபர் பையை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தியதில் அவர் ஈரோடு ரயில்வே துறையில் மெக்கானிக் பிரிவில் உதவியாளராக பணிபுரியும் செந்தில்குமார் என்பது தெரிய வந்தது. பின்னர் தனிப்படையினர் அமைத்து அந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மதுரை எச். எம். எஸ் காலனி பகுதியில் தனது குடும்பத்தினருடன் தங்கி இருப்பது தெரிய வந்தது.

பின்னர் காவல்துறையினர் அவரது வீட்டை ஆய்வு செய்தபோது ரயில் பயணிகளிடமிருந்து திருடிய சுமார் 250 -க்கும் மேற்பட்ட திருட்டு பைகள் அடிக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதனைப் போன்று ஈரோடு பகுதியில் அவர் தங்கியிருந்த அறையை ஆய்வு செய்தபோது அங்கிருந்து சில திருட்டுப் பைகளும் மீட்கப்பட்டன. மேலும் அவரிடமிருந்து 250 பைகள் மற்றும் 30 பவுண் நகைகள், 30 செல்போன்கள், 9 லேப்டாக்கள் 2 ஐபேட், செல்போன் சார்ஜர், ஹெட்செட், காலனி உள்ளிட்ட திருட்டுப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் கடந்த 6 வருடமாக மதுரை, கரூர், விருத்தாச்சலம், ஈரோடு, நெல்லை போன்ற பல்வேறு ரயில் நிலையங்களில் தனியாக செல்லக்கூடிய ரயில்வே பயணிகளை குறிவைத்து அவர்களது லக்கேஜ்களை தூக்கி சென்று உதவி புரிவது போன்று நடித்து செந்தில்குமார் கைவரிசை காட்டியுள்ளார். செந்தில்குமாரின் இந்த திருட்டு செயலுக்கு அவரது குடும்பத்தினரும் உடமையாக இருந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பயணிகள் இவ்வாறான நபர்களை கண்டு ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.