
சென்னை மாவட்டத்தில் உள்ள மிட்டனமல்லி உதயசூரியன் தெருவில் வையாபுரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவராஜ் குமார் என்ற மகனும், திவ்யலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் வையாபுரி இந்திய விமானப்படையில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது சென்னை பெரம்பூர் பகுதியில் இருக்கும் ஐ.சி.எப் ரயில்வே தொழிற்சாலையில் வையாபுரி ஜூனியர் என்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்த வையாபுரி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வையாபுரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வையாபுரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.