
பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது பல வழக்குகள் உள்ளது எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரகுபதி தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் முக்கியமான கருத்தை பதிவு செய்திருக்கிறார். ராஜ்பவன் தாக்குதல் மீதான விஷயத்தில் பாஜக மீது சந்தேகம் இருப்பதாக அவர் குற்றம் சாட்டை முன் வைத்திருக்கிறார். ராஜ் பவன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலை நேற்றைய தினம் கருக்கா வினோத் என்ற நபர் நடத்தி இருந்தார்.
கையில் வைத்திருந்த மதுபாட்டில் அவர் பெட்ரோலை நிரப்பி அதிலே திரி ஒன்றை வைத்து அவர் பெட்ரோல் பாம் ஆக உபயோகப்படுத்தி இருந்தார். இந்த விவகாரம் என்பது கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக தமிழக காவல்துறை எடுத்து இருக்கக்கூடிய நடவடிக்கை என்பது போதுமானதாக இல்லை.
இன்னும் விரிவான நடவடிக்கை என்பது தேவை. தொடர்ந்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ராஜ்பவன் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையிலே தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் முக்கியமான கருத்தை தெரிவித்து இருக்கின்றார்.
ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது. இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது.
