
இந்தியாவின் முதல் கவர்னரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான ராஜாஜியின் கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். இவர் இன்று பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய கேசவன் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் கட்சியிலிருந்து விலகுவதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இந்நிலையில் தற்போது திடீரென பாஜக கட்சியில் கேசவன் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் பாஜக கட்சியில் இணைவதால் அவருக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தால் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு நிலவும் நிலையில் தற்போது ராஜாஜியின் பேரன் பாஜகவில் இணைவதாக வந்த தகவல் மீண்டும் அவர்களுக்கு சோதனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.