பிரபல இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மகளுக்காக லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் ரஜினியின் புதிய போஸ்டரை தற்போது லால் சலாம் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் லால் சலாம் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.