தமிழ் சினிமாவில் பிரபலமாகவும், புகழின் உச்சியிலும் இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தனது ரசிகர்களால் செல்லமாக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இன்றும் தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகராலும் இவரிடத்தை பிடிக்க முடியவில்லை. இந்திய சினிமாவின் பெருமையாக கொண்டாடப்படும் இவர் இன்றும் இளம் நடிகர்களுடன் போட்டியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பாபா பட சூட்டிங் நடைபெறும் போது, விஜயை பார்க்க ஓடோடி சென்றுள்ளார் என்பது குறித்து உங்களுக்கு தெரியும். ஆமாம், பொதுவாக நடிகர்கள் இருவரின் பட சூட்டின் தளம் அருகில் இருக்கும் போது 2 நட்சத்திரங்களும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வது சாதாரணம்தான்.

அந்த வகையில் ரஜினிகாந்தின் பாபா பட சூட்டிங் மற்றும் விஜயின் பகவதி பட சூட்டிங் ஆகிய 2 அருகில் தான் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் விஜய், ரஜினிகாந்தை பார்க்க வேண்டும் என்று தனது இயக்குனருடன் கேட்டுள்ளார். அப்போது அவரது இயக்குனர் தற்போது எடுக்கப்பட்ட சூட் முடித்த பின்பு, நீங்கள் அவரை பார்க்கச் சொல்லலாம் என்று கூறியுள்ளார். அப்போது திடீரென ரஜினிகாந்த், விஜய்யின் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு நேரடியாக வந்துள்ளார். பொதுவாக முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர்கள் இடையே சண்டை இருக்கும். ஆனால் அது போன்ற எந்த எண்ணமும் இல்லாமல் இருப்பவர்கள் தான் புகழை உச்சத்தில் இருக்கின்றனர் என்று இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.