
பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் ஆவார். இவர் இதற்கு முன்பு இரண்டு திருமணமானவர். இந்நிலையில் பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற இவர் திருமணத்தை விவாகரத்து செய்த போது மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானார். டெல்லியை சேர்ந்த அடில்கான் என்ற நபரை காதலித்து இவர் இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். அதன்பின் ராக்கி சாவந்த் முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்ட நிலையில் இருவரும் சில காலம் மட்டுமே வாழ்ந்து வந்தனர். பிறகு அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதால் ராக்கி சாவந்த் தனது கணவர் அடில்கான் மீது மும்பை காவல் நிலையத்தில் திருட்டு புகார் செய்தார். பின்னர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்து கொண்ட ரித்தேஷ் சிங் என்பவரை திருமணம் செய்து சில நாட்கள் ரகசியமாக வைத்திருந்தார். தற்போது ராக்கி மீண்டும் திருமணம் முடிவு செய்து உள்ளார்.
அதுவும் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இந்தியாவில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு ஸ்விட்சர்லாந்தில் தேன் நிலவு நடத்த முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் பாகிஸ்தானிலிருந்து என்னை திருமணம் செய்ய பலரும் விரும்புகின்றனர். பாகிஸ்தான் சென்ற போது தான் எனது முந்தைய இரு திருமணத்தின் மூலம் எவ்வளவு சித்திரவதை அனுபவித்தேன் என்பதை தெரிந்து கொண்டேன். மேலும் பாகிஸ்தான் மக்களை நான் மிகவும் விரும்புகின்றேன். அதோடு பாகிஸ்தானை சேர்ந்த தோதி கான் என்பவரை திருமணம் செய்யவும் இருக்கின்றேன்.
அவர் நடிகராகவும் போலீஸ் அதிகாரியாகவும் உள்ளார். எங்களது திருமணம் பாகிஸ்தானில் நடைபெறும். அதோடு இந்தியாவில் வரவேற்பு நிகழ்ச்சியும் ஸ்விட்சர்லாந்த் அல்லது நெதர்லாந்தில் தேன்நிலவு கொண்டாடவும் இருக்கின்றேன் என்று ராக்கி சாவந்த் மூன்றாவது முறையாக திருமணம் செய்வதை பற்றி கூறியுள்ளார். இவரின் இந்த முடிவு பாலிவுட்டில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.