
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலையை கடுமையாக விமர்சித்து, “அயோத்தியில் பாபர் மசூதி சிதைந்ததைப் போல காங்கிரசின் கட்டமைப்பும் சிதைந்து விட்டது” என்று தெரிவித்தார். அரியானா சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் யோகி, காங்கிரஸின் ஒற்றுமையின்மையைச் சுட்டிக்காட்டியதோடு, ராம பக்தர்கள் வெளியிட்ட கோஷத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார்.
காங்கிரஸ் பிளவுபட்ட நிலையில் செயலிழந்து விட்டதாக கூறிய யோகி ஆதித்யநாத், “ஒற்றுமையாக இருந்தால் எந்த சக்தியும் உங்களை வீழ்த்த முடியாது” என்று பாஜக ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார். மேலும், ராகுல் காந்தி இந்தியாவை அவமதிக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் பயன்படுத்துகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு மற்றும் அதன் பின்னர் ரூ.1800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்ட நிகழ்வுகளை அவர் நினைவுகூர்ந்தார். இந்நிலையில், யோகியின் பேச்சு அரசியல் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது