
பிரெஞ்ச் நாட்டில் வசித்து வரும் யூடியூபர் ஒருவர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட நிலையில் சர்வதேச பயணிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது பிரெஞ்சு நாட்டை சேர்ந்த விக்டர் பிளாஹோ என்பவர் இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டார். அப்போது மும்பையில் இருந்து வாரணாசி சென்ற அவர் அங்கிருந்து ஆக்ரா சென்றார். பின்னர் ஆக்ராவிலிருந்து டெல்லி சென்றார். இவ்வாறு நீண்ட தூர ரயில் பயணங்களை மேற்கொண்ட அவர் கிட்டத்தட்ட 46 மணி நேரம் பயணித்தார்.
இந்த பயணத்தின் போது ஸ்லீப்பர் முதல் 3 ஏசி பெட்டியில் அமர்ந்து சென்ற நிலையில் தன்னுடைய அனுபவங்களை அவர் வீடியோவாக வெளியிட்டார். அதில் “இந்த பயணம் என்னை முற்றிலும் என் மனதை உடைத்து விட்டது” என்றும், தான் பயணித்த போது ரயிலில் எலி, பட்டாம்பூச்சி போன்ற உயிரினங்கள் வந்ததாகவும், சுத்தமின்மை குறித்தும் கூறியுள்ளார். அதோடு சில ரயில்களில் தரையில் குப்பைகள் குவித்து வைத்திருப்பதை சுட்டி காட்டிய அவர் இங்கு மிகவும் அசுத்தமாக இருக்கிறது என்று கூறினார்.
அதன் பிறகு “நான் இனிமேல் இந்தப் பக்கம் வரமாட்டேன்” என்றும் , பயணிகளின் கூச்சல் மற்றும் நெரிசலால் இரவு தூங்க முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் புலம்பினார். மேலும் “இனி யாரும் இந்த வகை ரயில்களில் பயணம் செய்ய வேண்டாம், பட்ஜெட் இருந்தால் உயர்ந்த வகை டிக்கெட் வாங்கி பயணம் செய்யுங்கள்” என சர்வதேச பயணிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக வீடியோவை பகிர்ந்து உள்ளார்.