பொதுவாக ரயிலில் சிவப்பு மற்றும் நீல நிறம் பெட்டிகள் இருக்கும். ஏராளமான ரயில்களில் நீல நிற பெட்டிகள் இருக்கிறது. எனினும் ராஜ்தானி மற்றும் சூப்பர்ஃபாஸ்ட் உள்ளிட்ட பிரீமியம் வகுப்பு ரயில்களில் சிவப்பு வண்ண பெட்டிகள் இருக்கிறது. கடந்த சில வருடங்களில் ரயில்வேயின் பெட்டிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஒரு காலக்கட்டத்தில் ரயிலின் பெட்டிகள் வெளிர் சிவப்பு (அ) பழுப்பு நிறத்தில் இருந்தது. அதன்பின் நீல நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது சிவப்பு நிற பெட்டிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நீலம் மற்றும் சிவப்பு நிறங்களின் இந்த கோச்சுகளானது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் தினசரி கோடிக்கணக்கானோர் ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர். ஆகவே ரயில்தான் நாட்டின் பரபரப்பான போக்குவரத்து சாதனம் ஆகும்.

அதனால் தான் இந்திய ரயில்வே குறிப்பிட்ட கால இடைவெளியில் பயன்பாட்டில் உள்ள ரயில் பெட்டிகளை சேவைகளிலிருந்து அகற்றி அவற்றின் இடத்தில் புது பெட்டிகள் பயன்படுத்துகிறது. இந்திய ரயில்வேயில் இரண்டு வகை கோச்கள் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ICF (Integral Coach Factory) மற்றும் LHB (Linke Hofmann Busch) கோச்சுகள் ஆகும். ICF கோச்சுகளை விடவும் LHB பெட்டிகள் சிறந்தவை மற்றும் பாதுகாப்பானவை ஆகும்.

LHB பெட்டிகள் ஆன்டி டெலஸ்கோபிக் வடிவமைப்பின் கீழ் கட்டப்பட்டு இருக்கிறது. அதன்படி விபத்து ஏற்பட்டால் அவை ஒன்றுடன் ஒன்று மோதுவதில்லை. LHB பெட்டிகள் துருப்பிடிக்காத எஃகு வாயிலாக தயாரிக்கப்படுவதால் விபத்து ஏற்படும்போது அதை தாக்க எதிர்ப்பை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி சுமந்து செல்லும் திறனையும் அதிகரிக்கிறது.