
இந்திய ரிசர்வ் வங்கியானது கலைஞர் ஒரு நினைவு நாணயமானது விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பொதுவாக ஒரு ரூபாய் நாணயம் முதல் 10 ரூபாய் நாணயங்கள் வரை புழக்கத்தில் இருக்கிறது. நாட்டில் தலைவர்களை கௌரவிக்கும் விதமாக அச்சடிக்கும் படும் நாணயங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. இந்த நாணயங்களை வேண்டுமானால் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் சென்று வாங்கிக் கொள்ளலாம்.
இந்நிலையில் சமீபத்தில் மத்திய மந்திரி ராஜ் நாத் சிங் கலைஞர் நினைவு நாணயத்தை அறிமுகப்படுத்தி வைத்த நிலையில் திமுக அரசு ஒரு நாணயத்தை 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்தது. இந்நிலையில் மத்திய அரசு தற்போது கலைஞர் நினைவு நாணயத்தின் விலையை குறைத்து ரூ.4180 என்று நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இந்த நாணயத்தை விருப்பமுள்ளவர்கள் ரிசர்வ் வங்கியின் நாணய விற்பனை இணையதள பக்கத்திற்குள் சென்று வாங்கிக் கொள்ளலாம்.