நேற்று நடைபெற்ற RCB – KKR இடையேயான போட்டியில் கொல்கத்தா 21 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் முதலில் பேட் செய்த கேகேஆர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. பின்னர் பெரிய இலக்கை சேஸ் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்நிலையில் இணையத்தில் சிறுவன் ஒருவனின் புகைப்படம் வைரலாகி வருகிறது. நேற்று நடைபெற்ற RCB – KKR இடையேயான போட்டியில் RCB உடை அணிந்த சிறுவன் ஒருவன், ‘RCB அணி கோப்பையை வெல்லும் வரை பள்ளியில் சேரமாட்டேன்’ என்ற வசனம் அடங்கிய பேனரை பிடித்துள்ளான். இந்த புகைப்படத்தை கலாய்த்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நடந்து முடிந்த 15 ஐபிஎல் சீசனில் ஒருமுறை கூட RCB அணி கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.