ஐபிஎல் தொடரில் வருகின்ற 18ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது.

இந்நிலையில் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியை முன்னிட்டு எம் எஸ் தோனி தீவிர பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவை தோனி ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.