
சென்னை வேளச்சேரியில் ஜீவரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றதை வைத்து ஜீவரத்தினம் தனது நண்பர்களை கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் கூர்மையான ஆயுதத்தால் ஜீவரத்தினத்தை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து காவல்த்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஜீவரத்தினத்தை தாக்கி விட்டு தலைமறைவாக இருந்த அவரது நண்பர்களான அப்பு, ஜெகதீஷ், ரமேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் அப்புவின் மனைவியிடம் ஜீவரத்தினம் நெருங்கி பழகி வந்ததாகவும், கிரிக்கெட் போட்டி குறித்து கிண்டல் செய்ததாகவும் ஆத்திரத்தில் அவரை தாக்கியது தெரியவந்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இடையே போட்டி நடைபெற்றது. இதில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பெங்களூர் அணி வீழ்த்தியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.