
பிப்ரவரி 28 ஒவ்வொரு வருடமும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடுவதன் காரணம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அறிவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் மத்தியில் அறிவியல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதற்காக ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. அறிவியல் பயன்பாடு விஞ்ஞானிகள் படித்தவர்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.
தேசத் தலைவர்கள் மற்றும் தியாகிகளை கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளை போற்ற கடந்த 1987 முதல் இந்த தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து இந்த தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த சர் சி.வி ராமன் “ராமன் விளைவை” கண்டுபிடித்தது பிப்ரவரி 28 தான். இதன் காரணமாக தான் இந்த தினத்தில் அறிவியல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.