
சரக்கு மற்றும் சேவை வரி என்பது மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசு மறைமுகமாக வசூலிக்கப்படும் வழியாகும். இந்த வரியானது கடந்த மார்ச் 2017 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் இந்தியாவின் வரி வசூல் உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி மார்ச் மாதத்தில் மட்டும் வரி தொகையானது ரூ.1.96 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரி தொகையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்த வரி வசூலானது 10% அதிகரித்துள்ளதாக நிதி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வரி அதிகரிப்பு இந்தியாவில் உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என்றும் கூறப்படுகிறது.