சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியிருந்ததாவது, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், பேரிடர் வேளாண் மேலாண்மை துணை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் பங்கேற்றனர். அப்போது மு.க ஸ்டாலின் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டறிந்தார். அதோடு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.