உத்திர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பகுதியில் அஜித்குமார்(20), ரஞ்சித்குமார்(16) என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சமூக வலைதளத்தில் “ரீல்ஸ்” பதிவிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இந்நிலையில் தீபாவளி அன்று இவர்கள் இருவரும் இக்டில் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டு வீடியோ எடுத்துள்ளனர். அப்போது அந்த வழியாக ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது.

இதனை பார்த்த அவர்கள் ரயில் வரும்போது தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி தங்களது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தனர். வீடியோ எடுப்பதில் ஆர்வம் காட்டிய அவர்கள் ரயில் தங்களது அருகில் வருவதை கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் திரும்பி பார்ப்பதற்குள் வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீதும் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.