
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உமாரியா கிராமத்தில் நேற்று நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லகர்பூர் என்ற பகுதியில் முகமது அகமது (26), நஜ்னீன் (24) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 3 வயதில் அப்துல்லா என்ற மகன் இருந்துள்ளான். இவர்கள் தங்கள் மகனை அழைத்துக் கொண்டு நேற்று உமாரியா கிராமத்திற்கு சென்றனர்.
அப்போது அவர்கள் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்தனர். தங்கள் மகனுடன் அவர்கள் ரயில் வருவதை கூட கவனிக்காமல் ரீல்ஸ் வீடியோ கிடைத்த நிலையில் வேகமாக வந்த ரயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடைய உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ரீல்ஸ் மோகத்தால் ஒரு குடும்பமே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.