மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் 19 வயதான பெண்ணும், மாயங்க் பரிஹார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, இவர்கள் இருவரும், மாயங்க் பரிஹார் என்பவரது நண்பரான ஹர்ஷில் தாக்கூர் வீட்டில் தங்கியுள்ளனர்.

அப்போது அந்த பெண்ணின் காதலனின் நண்பன், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் தனது காதலனிடம் கூறியுள்ளார். இதனால் மாயங்க் பரிஹார் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதையடுத்து அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் கூறியதாவது, காதலரின் நண்பரால் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது என்று கூறினார்.

அதன் பின் காவல்துறையினர் அந்த பெண்ணின் காதலர் மாயங்க் பரிஹார், அவரது நண்பர் ஹர்ஷில் தாக்கூர் மற்றும் அவரது மனைவி உர்வசி தாக்கூரை கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றது.