மதிமுகவில் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பிரச்சனையில் இந்த விவகாரம் மேலும் பூதாகரமாகியது. மல்லை சத்யாவை மதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என்று திருச்சி மாவட்டம் மதிமுகவினர் தனி தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். இந்நிலையில் எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மல்லை சத்யா கூறியதாவது, நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியிலிருந்து நீக்கி விடுங்கள். துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக  நான் தயார். கடைசி வரை தலைவரின் தொண்டனாகவே இருந்துவிட்டு செல்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் துரை வைகோவை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தது நான் தான் என்று கூறி தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.