தமிழகத்தில் சிறுதானிய உணவு பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மாநிலத்திலுள்ள ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ ராகி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். எனினும் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் அளவுக்கு ராகி இல்லாததால் முதல் கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க முடிவுசெய்யபட்டது.

அந்த வகையில் உதகை அருகில் பாலகொலா மலை கிராமத்தில் இந்த திட்டம் நேற்று (மே 6) துவங்கி வைக்கப்பட்டது. இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் போன்றோர் பங்கேற்றனர். அதேபோன்று தமிழகத்தில் முதல் முறையாக கியூ-ஆர் கோடு வாயிலாக பணத்தை செலுத்தி ரேஷன் பொருட்களை வாங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தனர்.