
சீனாவின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான டீப்சீக் நிறுவனத்தின் AI மாடல்கள் மற்றும் செயலிகள் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நிலையில் இதனை பயன்படுத்த அனைத்து நாடுகளும் அச்சப்படுகின்றன. தரவு பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த சந்தேகங்கள் காரணமாக தொடர்ந்து அனைத்து நாடுகளும் இந்த பயன்பாட்டை தடை செய்துள்ளது. இதில் இத்தாலி, தைவான், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் மத்திய நிதி அமைச்சக பணியாளர்கள் தங்களுடைய அலுவலக கணினி, மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்களில் chat gpt, deepseek AI போன்ற செயற்கை நுண்ணறிவு செயலிகள் கருவிகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு மத்திய நிதி அமைச்சகத்தின் ஊழியர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவிற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.