தென்காசி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்கிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்வதால் பழைய குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டினாலும் ஓரமாக நின்று சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

நேற்று காலை மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருவி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளான பழைய குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.