
ஜம்மு காஷ்மீர் பகுதியில் பஹல்காம் என்ற சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பு என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக மத்திய அரசு இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானும் அங்கு வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது . அதன்படி சுமார் 1000 இந்தியர்கள் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதேபோன்று பாகிஸ்தான் மக்களும் 800 பேர் இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்என்று கூறப்படுகிறது. மேலும் வாகா எல்லையில் இதன் காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.