
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சியில் வெளியேறியவர்களை பற்றி நான் என்ன சொல்ல முடியும் ? அண்ணன் சீமான் அவர்கள் நல்லவர், நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிச்சிருக்காங்க…. அவரு தனியாக இருப்பேன், கூட்டணி வைக்க மாட்டேன் என்கிறார். அவரு தனியா சோறு மட்டும் சாப்பிடுவேன் என்று பார்க்கிறார்.
சோறு மட்டும் சாப்பிட முடியாது. நமக்கு கூட்டு, பொரியல், தயிர், குழம்பு, சாம்பார், உப்பு, ரசம் இதெல்லாம் வேண்டும். அதனால் எங்கள் சித்தாந்தம் வேறு. அண்ணனுக்கு வாழ்த்துக்கள்… ஏன்னா தனியா நிற்கும் பட்சத்தில் நாங்க அவரை எதிர்த்துப் போட்டியிட வேண்டியது வரும். I.N.D.I.A கூட்டணி போகலாமா ? வேண்டாமா ? என இனிமேல் தான் நாங்க முடிவு பண்ணுவோம். பொது கூட்டம் அடுத்த மாதம் பல்லாவரத்தில் பண்ண இருக்கின்றோம்.
அதை தொடர்ந்து கலந்து ஆலோசனைகள்… யாருக்கு என்ன ? என்பதை இப்பொழுது நாங்கள் வெளிப்படையாக சொல்ல முடியாது. அம்மையார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியே வந்துட்டாங்கன்னு தானே கேக்குறீங்க… திரிணமூல் காங்கிரஸ் 10, 15 வருஷம் காங்கிரஸ் தியாகி ஆன பிறகு,
ராஜீவ் காந்தி தியாகி ஆன பிறகு…. பத்து வருஷத்துக்கு மேல அவங்க அரசியல்ல ஈடுபட முடியாம இருந்தாங்க…. சோனியா எல்லாரும் இருந்தாங்க… எல்லாருக்கும் தெரிஞ்ச நேரத்துல… அப்பா எல்லாரும் காங்கிரஸ்ல இருந்தவங்க தான்னு நினைக்கிறேன்…. அதிலிருந்து பிரிந்து போனவங்க தான் மம்தா. என்னோட கருத்து நீங்க கேட்டதற்கு….
ஒரு மூத்த எதிர்க்கட்சியாக காங்கிரஸ்காகவும், இந்தியா கூட்டணிக்கு நான் சொல்ல வேண்டியது…. காங்கிரஸ் ஆக இருக்கட்டும், இங்க அந்த காலகட்டத்தில் மூப்பனார் ஆரம்பிச்சாரு, அதுக்கு அப்புறம் சரத் பவார் எல்லாம் அந்த காங்கிரஸ்ல இருந்து பிரிஞ்சு போயிட்டாங்க… பிஞ்சு போனவங்க தான்…
அதையெல்லாம் அவங்க சரி நம்ம தாய் கழகம் ஆச்சே, இப்போ ராகுல் காந்தி பிரதமராக வரட்டுமே, ஏன் நம்ப பிரியங்கா காந்தி வரட்டுமே, அப்படின்னு நினைச்சு…. எல்லாரும் ஒருங்கிணைச்சு, அதுல ஈகோ பார்க்க வேண்டிய அவசியமில்லை. 34 வருஷமா அந்த குடும்பம் அவர் இறந்ததுக்கு அப்புறம் எந்த பதவியிலும் இல்ல. ஒரு எதிர்க்கட்சி என அவங்க உருவாக்க விரும்பனால்… அப்படி ஒரு கூட்டணி அமைக்கலாம். இது என்னுடைய ஆலோசனை தெரிவித்தார்.