மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியில் நிகழ்ந்த ஒரு குழு மோதல் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் பெண்கள் மற்றும் ஆண்கள் கூட்டு சண்டையில் ஈடுபட்டு ஒருவர் மீது ஒருவர் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. வீட்டின் மேல் மாடியில் நடந்து கொண்டிருந்த இந்த சண்டை ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்தது.

சிலர் சண்டையை நிறுத்த முயற்சிக்கும் போதே மாடி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சண்டையில் ஈடுபட்ட பலர் கீழே விழுந்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் பரவி, பார்ப்போருக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

 

இந்த வீடியோவில் இடிபாடுகளால் யாராவது உயிரிழந்தார்களா என்பது தெளிவாகவில்லை. ஆனால் கீழே விழுந்தவர்கள் பலர் காயம் அடைந்திருக்க வாய்ப்புள்ளது. சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “ஏன் சண்டை?”, “கீழே போனதால் இப்போ மாடியில சண்டை நடக்காது” என சிரிப்போடு விமர்சனங்களையும், கேலிச்சொற்களையும் பகிர்ந்துள்ளனர்.

சிலர் இது ஒரு நகைச்சுவை திரைப்படம் போல தான் உள்ளது எனவும் கமெண்ட் செய்துள்ளனர். இந்த சம்பவம், சிறிய வாக்குவாதம் கூட எவ்வளவு பெரிய விபத்துகளாக மாறலாம் என்பதற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.