உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் துர்கா சிலையை கரைக்கும் போது இரு தரப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றிய நிலையில், கைகலப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். அதோடு 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் அமைதி திரும்பியது.

இந்நிலையில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது. ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். அதோடு சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்தனர். அதுமட்டுமல்லாது மருத்துவமனைக்குள் புகுந்து படுக்கையை நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இந்த வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வராததால், தற்போது அந்த பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.