நம்முடைய பூமியை பற்றியும் விண்வெளி பற்றியும் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக விஞ்ஞானிகள் அவ்வப்போது முக்கிய தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நாம் வாழும் பூமி அதிக அளவுக்கு வெப்பம் ஆவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். அதாவது பருவநிலை மாற்றத்தின் காரணமாக பூமியின் சராசரி வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ் முதல் 14 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக நெதர்லாந்தில் உள்ள அல்ட்ரெக்ட் பல்கலைக்கழகம் கடலியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் பசுபிக் பெருங்கடலில் உள்ள மண் மற்றும் பாறை போன்றவற்றை ஆய்வு செய்தனர். அந்த சோதனையின் முடிவில் பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் வாயு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் இதன் காரணமாக IPCC (45° c) கணிப்பை விட அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.