
தஞ்சையில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் எடப்பாடி பழனிசாமி உடன் இணை முடியுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவரோடு இணைய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், சுயநலவாதிகள், பணத்திமிர் பிடித்தவர்களின் கைகளில் அதிமுக போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் அமமுக கட்சி தொடங்கப்பட்டது .
அதிமுக திமுகவின் பி- டீமாக செயல்பட்டது. ஆர் கே நகர் இடைத்தேர்தல் முதல் தொடர்ந்து பத்து தேர்தலில் அதிமுக தோல்வி கண்டது.. எனவே அவர்களுடன் இனி இணைவது சாத்தியமே இல்லை என்று கூறியிருக்கிறார்