
18 வயதுக்குப்பட்டோர் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், நாட்டில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டி அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இதில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநிலங்களவையில் பேசி அவர் கூறியதாவது, கடந்த 2023-24-ம் நிதி ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 11 ஆயிரத்து 890 விபத்துக்கள் சிறுவர்களால் ஏற்பட்டதாக தெரிவித்தார். அதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தான் 2063 விபத்துகளும், மத்திய பிரதேசத்தில் 1383 விபத்துகளும், மகாராஷ்டிராவில் 1067 விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.