வடகிழக்கு பருவமழை பெய்தால் சென்னை வெள்ளக்காரடாக மாறுவது வழக்கம். ஆனால் தற்போது ஐ.டி நகரமான பெங்களூரில் நிலைமை மோசமாகி உள்ளது. அதாவது தமிழகத்தில் நேற்று முன்தினம் பரவலாக கனமழை பெய்தது, இரவு ஓய்ந்தது. ஆனால் ஆந்திரா மற்றும் பெங்களூருவில் இரவிலும் கனமழை பெய்து, காலையும் நீடித்தது.

இதனால் மன்யாதா டெக் பார்க் உள்ள சாலையில் கால்வாய் போல் நீர் தேங்கி கிடக்கின்றன. இதில் பயணம் செய்யும் கார்கள் நீந்துவது போல மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.