
குஜராத்தில் உள்ள வடோதரா நகரில் இருக்கும் ஒரு தனித்துவமான உணவகத்தில், நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பெற்ற அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மஞ்சள் நிற அலங்காரத்துடன் இருந்த அந்த உணவகத்தில் அவர் உள்ளே நுழைந்ததும், மஞ்சள் நிற ரோபோ ஒன்று மலர்களுடன் அவரை வரவேற்றது.
ரோபோவின் பக்கத்தில் உள்ள “Exit” பொத்தானை அழுத்தியதும், “இனிய உணவு அனுபவம்” என கூறி ரோபோ நெகிழ்ந்தது. பின்னர், சமையலறையின் காட்சிகள், சிறப்பு மாக்டெயில்கள் மற்றும் அதற்குரிய பிரம்மாண்ட பரிமாற்ற முறைகள் வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
View this post on Instagram
உணவுப் பகுதியில் வித்யார்த்திக்கு பரிமாறப்பட்ட அனைத்தும் சைவ உணவுகளாக இருந்தது. தயிர்க் கபாப், நூடுல்ஸ், டம் பிரியாணி, வடை, கிரேவி வகைகள், நான், மாண்சுரியன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான உணவுகளை அவர் சுவைத்தார்.
மேலும், கோதுமை மாவில் செய்யப்பட்ட லச்சாதார் பரோட்டா மற்றும் சிறந்த கிரீமி கிரேவியுடன் சுவைத்து, பரிமாற்றத்தின் தனித்துவத்தையும் உணவின் சுவையையும் புகழ்ந்தார். மேலும், “இது வேற லெவல் அனுபவம்!” என கூறி அவரது உணவுப் பயணத்தை முடித்தார். இவர் தமிழில் நடிகர் விஜய் நடித்த “பகவதி” படத்தில் வில்லனான நடித்துள்ளார்.