சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. இதில் இந்தியா படி தோல்வி அடைந்தது. இதில் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா சொதப்பினார். இதுதான் இந்தியா அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமானது. இதன் காரணமாக ரோகித்தை விமர்சித்தனர். குறிப்பாக இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அவரை கடுமையாக விமர்சித்தார். இதற்கிடையில் உள்ளூர் போட்டிகளில் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் கட்டாயம் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து ரோகித் சர்மா, ரஞ்சி கோப்பையில் மும்பை அணி சார்பாக விளையாடினார்.

ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான மும்பையின் போட்டியில் விளையாடிய அவர் 2 இன்னிங்ஸில் முறையே 3,28 ரன்கள் அடித்து ஏமாற்றத்தை கொடுத்தார். இதனால் இந்த தொடரிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று கவாஸ்கர் மீண்டும் விமர்சித்தார். இதனால் அதிரமடைந்த அவர், சுனில் கவாஸ்கர் குறித்து  இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தன்னை தேவையில்லாமல் விமர்சிப்பதாகவும், குறிப்பாக ரஞ்சி கோப்பையில் நான் விளையாடியதை குறை சொல்வது நியாயமில்லை. இந்த விமர்சனங்கள் எனக்கு அழுத்தத்தை கொடுக்கிறது என்று அவர் பிசிசிஐ-யிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.