தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர் பல்வேறு எதிர்ப்புகளை மீறி சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை வளர்த்து பல்வேறு துறைகளில் சாதிக்கின்றனர். இவ்வாறு சாதனை படைத்த மூன்றாம் பாலினத்தவருக்கான முன்மாதிரி விருது ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கையர் தினமன்று வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் வகையிலும், மற்ற மூன்றாம் பாலினத்தவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் விருது வழங்கப்பட்டு 1 லட்ச ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் கொடுக்கப்படும்.

இந்த விருதை பெற தகுதி இருப்பவர்கள் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். மேலும் குறைந்தது 5 மூன்றாம் பாலினத்தவர்களுக்காவது அவர்கள் உதவியிருக்க வேண்டும். முக்கியமாக திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது. எனவே தகுதியான நபர்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி வருகிற 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.