திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு காமராஜர் பகுதியில் வசித்து வருபவர் அல்தாப் தாசிப் (36). இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர். அல்தாப் தாசிப் செய்யாறு அருகே நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இதன் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டு, நகை சேமிப்பு திட்டங்கள் என பல கோடி ரூபாய் மோசடி செய்ததால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளவர் ஆவார். இந்நிலையில் அல்தாபின் மேலாளராக வசந்த் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் வாலாஜா பகுதியில் வசித்து வருபவர் ஆவார். வசந்த் குமார் அல்தாபின் மனைவி மற்றும் மகளை காரில் வெளியூர்களுக்கு அழைத்துச் செல்லும் பணியை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதேபோல் சம்பவ நாளன்று சென்னைக்கு அல்தாபின் மனைவி மற்றும் மகளை சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அழைத்துச் செல்லும் வழியிலேயே இருவரையும் கடத்தி வைத்து க்கொண்டு அல்தாபின் மனைவி தாயார் ஹயாத்தின் பேகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களது மகள் மற்றும் பேத்தியை கடத்தி வைத்திருப்பதாகவும், ஒரு கோடி பணம் கொடுத்தால் மட்டுமே அனுப்புவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் செய்வதறியாது ஹயாத் அருகில் உள்ள ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரை தொடர்ந்து காவல்துறையினரின் அறிவுரைப்படி பணத்தை கொடுப்பதாக ஹையாத் வசந்தகுமார் இடம் மாந்தாங்கல் அருகே அவரை வரச் சொல்லி உள்ளார். வசந்தகுமார் இதனை நம்பி வந்து உள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை ரகசியமான முறையில் பதுங்கி இருந்து சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். வசந்தகுமார்ரோடு கடத்தலில் ஈடுபட்ட பார்த்திபன்(35),ஏசுதாஸ்(30),சரத்குமார்(31),ருத்ரேஸ்வர்(30), கோமதி (35), வினோத்(35), கார்த்திக்(34) ஆகிய எட்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.