
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவர் பழ. கருப்பையா, தமிழக போக்குவரத்து துறையில் உன்னால் வேலைக்கு ஆள் எடுக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய வருமானம் வரவேண்டிய துறையில் ஆள் எடுக்க முடியவில்லை. அவனுக்குரிய சம்பளம் நீ கொடுக்க முடியவில்லை.. டிரைவருக்கும், நடத்துனருக்கும் சம்பளம் கொடுக்க முடியவில்லை. என்ன செய்கிறீர்கள் என்றால் ? நீங்கள் 650 ரூபாய்க்கு டிரைவர் ஏஜென்சி மூலம் பிடிக்கிறீர்கள்.
ஏஜென்சிக்கு 150 ரூபாய் கமிஷன் போயிடுது. 500 ரூபாய்க்கு ஒரு பஸ் ஓட்டுகிறான். 1500 ரூபாய், 2000 ரூபாய் தனியார் கொடுக்கிறான் ஒரு இரவு ஓட்டுவதற்கு. இவன் 500 ரூபாய் கொடுக்கிறான். நான் சொல்கிறேன் தொழிலாளியை சுரண்டுகிறாய்… எல்லோரையும் சுரண்டி, நீ செய்யப் போவது என்ன ? இது என்ன ஆச்சி என்று நான் கேட்கிறேன் ? 1000 ரூபாய் மகளிருக்கு நாங்கள் கொடுத்து விட்டோம் என்றால் ? சரியாகி போய்விட்டதா ?
பத்தாயிரம் ரூபாய் ஒவ்வொரு குடிகாரனிடமிருந்து மாதம் டாஸ்மாக்கில் உருவி, மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறாய்.. 8000 அவன் குடும்ப பணம்தானே என்பது அவனுக்கு தெரியாது. ஆகவே இந்த ஆட்சி முறை சரியில்லை. கல்லூரிக்கு 5000 ஆசிரியர்கள் 20 ஆண்டுகளாக நிரந்தர படுத்தப்படாமல் அவர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு சம்பளம் 20 ஆயிரம் ரூபாய். நிரந்தரப்படுத்தப்பட்ட ஆசிரியருக்கு 80,000 ரூபாய்.
நிரந்தர படுத்தப்படாத ஆசிரியருக்கு 20,000 ரூபாய். இந்த 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 20 வருஷமாக இருக்கிறான். அவன் ஓய்வு பெற போகிறான். எதற்காக அவருடைய சம்பளத்தை, உழைப்பை சுரண்டுகிறாய்? அவனும் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறான். நிரந்தமாகவில்லை என்பதை தவிர, வேற என்ன இருக்கு ?
அவனிடம் கல்வி கற்றவர்கள் எல்லாம் 20 ஆண்டுகளாக உள்ள மாணவர்கள். வாத்தியாருக்கு சம்பளம் கொடுக்க மாட்டாய். டெம்பரடியா போடுற, பஸ் டிரைவர் போட மாட்ட ? டெம்பரரி. ஹை ஸ்கூலுக்கு வாத்தியார் இல்லை. இதற்கு இரண்டு மந்திரி. இவர்கள் மட்டும் கொள்ளையடித்து சவுரியமாக இருப்பார்கள். எந்த ஒன்றிலும் முறையான ஆட்சி அமைப்பு இல்லை.
ஒருவருக்கும் உரிய ஊதியத்தை இந்த அரசு கொடுப்பதில்லை. சொந்த முதலாளி போல அவர்களை உறிஞ்சுகிறது. ஆகவே இவற்றையெல்லாம் எடுத்து பேசுவதற்கான நிலைகள் இவர்களுடைய கூட்டணி கட்சிகளுக்கு இல்லாத காரணத்தினாலே, இதை எடுத்துப் பேசுவதற்கு உரிய ஒரு புதிய அமைப்பாக தமிழ்நாடு தன்னுரிமை கழகம் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.