திருவனந்தபுரம் அருகே உள்ள இரும்பனத்தில், 26 வயதான எம்.எஸ். சங்கீதா என்ற இளம் பெண், தற்கொலை செய்து கொண்டது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூனாங்குட்டி பரம்பில் சத்தியனின் மகளான சங்கீதா, சமீபத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து, சங்கீதாவின் கணவர் அபிலாஷ் , சங்கீதாவை அடித்ததாகவும், பணம் கோரியும் தொடர்ந்து துன்புறுத்தியதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் சங்கீதா மற்றும் அபிலாஷ் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது சங்கீதா வீட்டிலிருந்து தங்கம் அல்லது பணம் எதுவும் வழங்கப்படவில்லை என்பதைக் காரணமாக்கி, அபிலாஷ் தொடர்ந்து சங்கீதாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ரூ.3 லட்சம் கேட்டு கொடுமை செய்ததாகவும், மரணத்திற்கு ஒரு நாள் முன்பு, பல மணி நேரம் அடித்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஹெல்மெட்டால் தாக்கியதில் சங்கீதாவின் மூக்கு உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சங்கீதாவுக்கு LKG மற்றும் அங்கன்வாடி பள்ளியில் பயிலும் இரண்டு சிறு குழந்தைகளும் உள்ளனர்.