
சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆட்சியில் திட்டமிட்டு பணி செய்யல. அதுவும் நாங்க கொண்டுவந்த திட்டம்… ஸ்டிக்கர் ஒட்டி பேசிட்டு இருக்காரு அவரு…. அவரு கொண்டு வரல 4000 கோடி … அண்ணா திமுக ஆட்சியில் இருக்கும் போது, உலக வங்கி – ஆசிய வளர்ச்சி வங்கி இதன் மூலமாக கிடைக்கப்பெற்ற அந்தத் தொகை…. இவுங்க ஆட்சிக்கு வந்த பிறகு டெண்டர் விட்டு செஞ்சாங்க…
டெண்டரில் கமிஷன் வாங்கிட்டே நேரம் சரியாக போச்சு. இதை முறையாக செயல்படுத்தி இருந்தால்… இன்னைக்கு தண்ணீர் எல்லாம் வெளியேறியிருக்கும். ஓரளவு குறைந்திருக்கும். இரண்டாவது அங்கங்க இணைப்பு செய்யல… ஒரு கால்வாய் என்றால், இணைப்பு கொடுத்து செய்யணும்… அப்ப தான் தண்ணீர் வெளியேற முடியும். அதெல்லாம் செயல்படுத்தவில்லை…. இதெல்லாம் முதலமைச்சருக்கு தெரியாது, போனாதானே தெரியும்…
இந்த நேரத்துல ஃபார்முலா போர் நடக்கு. அதுதானே நாட்டுக்கு தேவை. நாட்டில் தண்ணீர் தேங்கினால் என்ன ? வெள்ளம் போனால் மக்களுக்கு என்ன ? மக்களுக்கு சாப்பாடு கிடைச்சா என்ன ? கிடைக்காட்டி என்ன ? அதெல்லாம் இந்த பொம்மை முதலமைச்சருக்கு தெரியாது. 42 கோடி இந்த கார் பந்தயம் நடத்துவதற்காக செலவு செஞ்சு சாலை அமைத்து இருகாங்க. இது எதுக்கு தேவை ? ஏற்கனவே ஒரு பகுதியில்…. இருங்காட்டு கோட்டையில அந்த கார் ரேஸுக்கு மைதானம் ஏற்படுத்தியிருக்கு. அங்கு நடத்துங்க…
சென்னை மத்திய பகுதி…. இந்த பகுதியில பல்நோக்கு மருத்துவமனை இருக்குது, ராஜீவ் காந்தி மருத்துவமனை இருக்குது, சென்ட்ரல் ரயில் நிலையம் இருக்குது, கோர்ட் இருக்குது, தலைமை செயலக இருக்கிறது… இவ்வளவுக்கும் இடையில ஏன் கார் ரேஸ் நடத்துறீங்க ? இது தேவையா ? கார் ரேஸ்சுக்கு செலவு செய்கின்ற 42 கோடியை எங்கெங்கெல்லாம் தண்ணி தேங்கி இருக்கிறதோ…. அந்த தண்ணியை தேங்காமல் இருப்பதற்கு மழைநீர் வடிகால் வசதி செய்து கொண்டிருந்தால் மக்கள் பயன்பெறுவார்கள்.
கடல்ல கொண்டு போய் பேனா வைக்கிறாராம்….. எழுதாத பேனா…. அதுக்கு ஒரு 85 கோடி. அந்த 85 கோடியை இந்த மக்கள் படுகின்ற அவதியை பார்த்தாவது…. இனியாவது எங்கெங்கெல்லாம் தண்ணீர் தங்கி இருக்கிறதோ, அந்த தண்ணி தேங்காமல் இருப்பதற்கு வடிகால் வசதி செய்வதற்கு அந்த பணத்தை செலவழித்தால் சரியாக இருக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள் என தெரிவித்தார்.